கண்ட தேவி, ஆராவயல் தரிசனம்.>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆராவயல் உயர்நிலைப் பள்ளிக்கு 5.10.2018 பயிற்சிக்குச் சென்றபோது கண்டதேவி சிவன் கோவிலையும் ஆராவயல் கோவிலையும் கண்டு வழிபட்டுவந்தேன். தானுச்சாவூரணியில் நகரத்தாரால் கைவிடப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகள் வருத்தமளித்தன.
ஆராவயல் உயர்நிலைப் பள்ளிக்கு 5.10.2018 பயிற்சிக்குச் சென்றபோது கண்டதேவி சிவன் கோவிலையும் ஆராவயல் கோவிலையும் கண்டு வழிபட்டுவந்தேன். தானுச்சாவூரணியில் நகரத்தாரால் கைவிடப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகள் வருத்தமளித்தன.
கண்டதேவி இராமாயணத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது. சீதையை இராவணன் தூக்கிச் சென்றபோது சடாயு தடுத்துப் போரிட்டுத் தன் சிறகுகளை இழந்தான். இராமன் வழிபட்ட லிங்கம் இராமநாதன் என்பதுபோல சிறகில்லாத சடாயு "சிறகிலி" வழிப்படட சிவன் "சிறகிலிநாதர்" என்று வழங்கப்படுகிறார். பின்னாளில் வணிகனொருவன் அங்கு பொன் புதையல் பெற்றதால் "சொர்ணமூர்த்தீசுவர்" என்ற பெயர் பெற்றார். மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைக்கொண்டு நகரத்தார் தலபுராணம் எழுதச்செய்து பெற்றுள்ளார்கள்.
அருமையான கற்றளி. 200 ஆண்டுகள் நகரத்தார் திருப்பணி. தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா தனிக்கோட்டங்களில் அருள்பாலிக்கிறார்கள். ஒவ்வொரு கோட்டமும் ஒரு தனி அற்புதம். கீழிருந்து மேல் வரை ஒவ்வொரு அங்குலமும் எல்லாவிதத்திலும் முழுமைபெற்றது. தூண்களின் புடைப்பு டிசைன்கள் அழகு. கல்யாண மண்டபம் கவர்வது.
கண்டதேவி திருக்குளம் பிரம்மாண்டமானது. என்றும் வற்றாதது. அங்கு மகாலிங்கமூர்த்தி பலிபீடம் வணங்கப்படுகிறது. பல நூற்றாண்டு பழமையான அத்திமரம் தலவிருட்சம். அதன் மேலே ஒரு பெரிய அரசமரம் ஊடுருவி வளர்ந்துள்ளது.
கண்டதேவி என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தேரோட்டமாகும். தேர் மேல்தட்டில் சுவாமியுடன் அர்ச்சகர். தண்ணீர்பந்தல், மண்டபங்கள் கட்டி வைத்துள்ள திருப்பணியாளர்கள் பகலிலேயே முன்னதாக வழிபட்டு அகன்று விடுகிறார்கள். பிறகு வடத்தைப் பிடித்து இழுப்பதில் தான் சச்சரவு. மேல்தட்டுக்குப் போட்டி இல்லை! சென்ற சில நூறு ஆண்டுகள் நாட்டார் மரபினர் கட்டுப்பாட்டில் இந்தப்பகுதி இருந்துள்ளது. தேர் வடத்தின்மீது ஏறி தேரை வழிநடத்திச் செலுத்துபவர் அம்மரபினர். சென்ற சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காலங்காலமாக இப்பகுதியில் வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட சாதியினரும் தேர் வடத்திற்கு உரிமை கோரியிருக்கிறார்கள். வெட்டுக் குத்து, கோர்ட் என்று தேரோட்டம் தேர் பராமரிப்புப் பணிசெய்யவேண்டும் என்ற பெயரில் நின்றுவிட்டது. சுயலாப அரசியல் கட்சி தலைவர்கள் ஊடுருவல் பிரச்சினையை அதிகரித்திருக்கிறது.
இப்பொழுது தேர் புதுப்பொலிவுடன் அழகுறப் புதுப்பிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கூரையை அகற்றாமல் பணி நிறைவடையவில்லை என்ற நிலை சொல்லப்படுகிறது. இவ்வாண்டு தேரோட்டம் ஆண்டவன், ஆள்பவர் திருவுள்ளம்!
ஆராவயல் சண்முகநாதபுரம் மீனாட்சி சுந்தரேசுவரர் சிவன்கோவில் குடமுழுக்கு அண்மையில் 1.7.2018 சிறப்பாக நடைவேறியுள்ளது. இராஜகோபுரத் திருப்பணி நீதியரசர் திரு சொக்கலிங்கம் பொருள் உதவி மற்றும் முயற்சியில் நகரத்தாரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கும்பாபிடேக மலர் தமிழறிஞர் சிறந்த ஆங்கிலக் கவி திரு ஆர்.எம்.சண்முகம் செட்டியார் முயற்சியில் வெகு சிறப்பாக உருவாகியுள்ளது.
ஆராவயல் உயர்நிலைப்பள்ளி மாணவர் பயிலரங்கம் குறித்து அடுத்து எழுதுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
சொ.வினைதீர்த்தான்






























2 கருத்துகள்:
Excellent
மிக்க நன்றி சகோதரர். தங்களுடைத விவரம் இல்லையே. தர வேண்டுகிறேன். நன்றி. சொ.வி
கருத்துரையிடுக