https://m.facebook.com/story.php?story_fbid=4243233425710698&id=100000722463448
6.4.2021 வள்ளல் அழகப்பருடைய 112வது பிறந்தநாள். இன்று பிற்பகல் 3 மணிக்கு சனநாயக் கடமையை நிறைவேற்றிய பிறகு கல்லூரியின் வடபால் உள்ள வள்ளல் நினைவிடம் சென்றேன். காலையில் கல்வியாளர்கள், மாணவர்கள், நகரின் பெருமக்கள் மலைபோல குவித்திருந்த மலர்க்குவியலில் துயில் இடம் போர்த்தப்பட்டிருந்தது. வேறொருவரும் இல்லாத அமைதியில் அழகப்பரின் புகைப்படம் அருகே நின்றது மனதை நிறைத்தது.
உலகில் உள்ளவரெல்லாம் தன் சந்ததிக்குப் பணம் சம்பாதித்தபோது அழகப்பா ஒருவர் தாம் தனக்கெனப் பொருள் சம்பாதித்தாராம். ஆம்; அவர் மட்டும் தான் பல்லாயிரம் மாணவர் நெஞ்சில் அறிவு விளக்காய் இன்றும் வாழ்கிறார்!
"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு!" (231)
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
Please see photos in my FB link: Vinaitheerthan Vino
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக